தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

Standard

July 8, 2025 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167

“சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம்
கேட்டுக்கொள்…
கற்றுக்கொள்…
தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

July 8, 2025 by Gowry Mohan

நிரந்தர வெற்றி

அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டு
மற்றவரை மிதித்து முன்னேறி
குறுக்கு வழியில் சென்று
தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு
கிடைக்கும் வெற்றி
நிலைப்பது
குறுகிய காலமே…

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

July 1, 2025 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166

“ஒரு நாள் பணக்கார
தந்தை அவரது மகனை வெளியூர்
கூட்டிச்சென்றார்.
அவரது மகனுக்கு ஏழைகள்
எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்.

“அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த
சுற்றுலா இருந்து என்ன
கத்துக்கிட்ட? “
.
மகன் சொன்னான்…
” பாத்தேன்… நாம ஒரு நாய்
வச்சிருக்கோம்.. அவங்க 4
வச்சிருக்காங்க…
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்…
அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்..
. அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு…
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள்
வாங்குறோம்… அவங்க
அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க…
திருடங்க வராமே இருக்க நாம
வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்…
அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் ,
நண்பர்கள் இருக்காங்க… “
.
.
தந்தை அவனையே வெறித்துக்
கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்…
” ரொம்ப நன்றி பா …. நாம
எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய
வச்சதுக்கு…”
”Money doesn’t make us rich”. ”

Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

July 1, 2025 by Gowry Mohan

இடம் மாறிய தருணம்

அவளை பார்த்த நொடி
நின்று வந்தது
உயிர் மூச்சு…!!!

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

June 24, 2025 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165

“தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.”
*****
“பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.”
*****
“கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.”
*****
“பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.”
*****
“உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

June 24, 2025 by Gowry Mohan

நீர் பாதுகாப்பு

பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது.

பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பயிர்கள் விளைந்து உணவாவதற்கும் தேவைப்படுகின்றது. நீர் உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் பயன்படுகின்றது. எனவே எமக்குக் கிடைக்கும் நல்ல நீரினை வீணாக்காது சிக்கனமாக உபயோகிப்பது மிக மிக அவசியமாகும்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Standard

June 15, 2025 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 164

“புத்தி உள்ளவன் பிழைத்துக்கொள்வான்

கருத்துள்ள கதை…

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,”என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.”அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,”என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!” கைதி அமைதியாகச் சொன்னான்,”அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.””

*****

Posted in கவிதைகள் ·

Standard

June 15, 2025 by Gowry Mohan

காதல் யுத்தம்

உன் பார்வையை வீசி
சலனப்படுத்திவிட்டாய்
உள்ளத்தை…
உன்னைத் தீண்ட
கட்டளை அனுப்புகின்றது
விழிகளுக்கு…

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

June 9, 2025 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு8 எ2

குவியல் 8                                                                                                                      எண்ணம் 2

கல்வித்துறை

மனிதன் வசதியாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான காரணிகளுள் கல்வி அறிவு மிகவும் முக்கியமானது. பொருள் ஈட்டுவதற்கும் அதனை சரியான முறையில் செலவு செய்வதற்கும், ஈட்டிய பொருளை பாதுகாப்பதற்கும் கல்வி அறிவு பயன்படுகிறது. ஒரு மனிதனின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து உலகிற்கு தெரியப்படுத்த கல்வி அறிவு துணை புரிகிறது. மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கவும் அதை நோக்கி பயணம் செய்யவும் வெற்றியடையவும் கல்வி வழிகாட்டுகிறது. ஆராய்ச்சிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் கல்வி துணை நிற்கிறது.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Standard

June 1, 2025 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 163

“ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவனது வழக்கம். ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. கோபம் கொண்ட அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·
← Older posts

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved