காதல் நீ கண்ணம்மா!


தினம் தினம்
உள்ளத் தூய்மையை காட்டும்
நேர் கொண்ட பார்வை…
உணர்வுகளின் மென்மையை எதிரொலிக்கும்
உதிரும் வார்த்தைகள்…
பொங்கும் அன்பை சிந்தும்
மலரும் புன்னகை…

ஆழ்கடலில் மூழ்கி
முத்துச்சிப்பிக்குள்
நுழைந்திடுவேன்…

பெண்ணே!
மென்மையில் மலர் போல்
பொறுமையில் பூமாதேவி போல்
வாழ்ந்திடு…

விழிகளுக்கு விருந்து படைத்து
என்னை கட்டி வைத்த பெண்ணே!
உள்ளத்துள் ஊடுருவி
உணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே!

மீன் போன்ற கண்கள் என்றாய்
அதை நீரிலே மிதக்க விட்டாய்…
ரோஜா இதழ்கள் என்றாய்
அதை வாடி வதங்க விட்டாய்…
அன்னம்போல் நடை என்றாய்
அதை தடுமாற வைத்துவிட்டாய்…
காதலின் உண்மை தெரியாத நீ!
காதலின் புனிதம் புரியாத நீ!
காதலின் மென்மை அறியாத நீ!
காதலை பேண முடியாத நீ!
காதல் சொன்னது ஏன்!!!

பெண்ணே!
தென்றலாய் வந்து
சுகம் தந்து
நட்பாய் பழகி என்
அன்பைப் பெற்றாய்…

பூமியில் வண்ணங்கள்
இரசித்துப் பயனை பெற்றிடுவீர்
இயற்கை தந்த வரமது
அழித்து அழிவைத் தேடாதீர்…