December 2025 archives
Archives
December 25, 2025 by Gowry Mohan
நீரும் இயற்கையும்
இயற்கை தந்துகொண்டிருக்கும் வரங்களில் ஒன்று நீர். நீர் இல்லாமல் இவ்வுலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நீரை மழை தருகிறது. அந்த மழையை இயற்கை எமக்குத் தருகிறது. “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.” என்ற திருவள்ளுவரின் திருக்குறள், நீர் இல்லாமல் இந்த உலகமும் உயிர்களும் நிலைத்து நிற்க முடியாது என்பதையும் நீர் கிடைப்பதற்கு மழையும் அவசியம் என்பதையும் குறிப்பிடுகின்றது.Archives
December 17, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 178
கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது. அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை. ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி […]Archives
December 17, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ3
குவியல் 8 எண்ணம் 3 சுற்றுலாத்துறை ஒரு நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கிறது. அத்துடன் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் மக்களின் பொது அறிவு விருத்தி அடைவதுடன் அவர்களை வழிநடத்துவதற்கு பல மொழிகளை அறிந்தும் கற்றும் மக்கள் தங்களை தயார்படுத்துவதன் மூலம் தங்கள் அறிவை மேம்படுத்துகின்றனர். இதனால் மக்களின் முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறை வழிவகுக்கிறது. சுற்றுலா, நாடுகளுக்கிடையிலான உறவை […]Archives
December 10, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 177
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.Archives
December 10, 2025 by Gowry Mohan
சுற்றுச் சூழல்
பூமியில் வண்ணங்கள்இரசித்து பயனை பெற்றிடுங்கள்இயற்கை தந்த வரமதுஅழித்து அழிவை தேடாதீர்…Archives
December 4, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 176
ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை காண முடிவு செய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார். தவத்தின் பயனாக மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார், மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம் முன்வினை காரணமாக இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.Archives
December 4, 2025 by Gowry Mohan