
காலையில் மென்மையாய் அணைத்து
இதம் தருகின்றாய்
மதியம் இறுக அணைத்து
வாடச் செய்கின்றாய்
மாலையில் அணைப்பை தளர்த்தி
மறைந்து போகின்றாய்
மறவாமல் மறுநாள் காலையில்
மீண்டும் வருகின்றாய்…
தினம் புது நாள் தந்து
புத்துயிர் தரும்
கதிரவனே!
உன் வருகையின்றி
அசையாது ஓர் அணுவும்
இந்த பூமியிலே…