வௌ்ளைப்பச்சை அரிசி மா – 1 கப்
சீனி (sugar) – 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பால் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
அரிசி மாவுடன் சீனி, உப்பு கலந்து தேங்காய்ப் பாலை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து குழைக்கவும். அதில் உங்களுக்கு விரும்பிய வடிவங்களை அச்சுரல் மூலமாகவோ அல்லது சிப்பி,சோகி, நட்சத்திரம் போன்ற வடிவங்களை செய்து தட்டுகளில் அடுக்கி வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இவற்றை சீனிப் பாணி காய்ச்சி அதில் போட்டு எடுத்தும் பரிமாறலாம்.
அரை கப் சீனியில் கால் கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து துளாவவும். கம்பி பதம் வந்ததும் பாத்திரத்தில் இருக்கும் பலகாரத்தில் சுற்றவர அதை ஊற்றி கிளறி குலுக்கவும். பின் சூடு ஆறியதும் பரிமாறலாம்.