படபடக்கும் இதயம்
பரபரக்கும் உணர்வுகள்
காணும்போதெல்லாம்…
உன்னை
விழிகளுள் வைத்திருந்தேன்
உன்
பார்வையின் அர்த்தத்தை
தேடி நின்றேன்…
ஆனால்
நீயோ
என் இதயத்துள் புகுந்து
நினைவுகளில்
நுழைந்துவிட்டாய்…
உன்னையே நினைக்க வைத்து
என்னை
பாடாய் படுத்துகின்றாய்
உன்
நேசம் அறியாமலே!!!