பெண்ணை
அடிமையாக நடத்துபவனும்
போதைப் பொருளாக பார்ப்பவனும்
வைத்து பணம் சம்பாதிப்பவனும்
இருக்கும் வரை
அவளுக்கேது மகிழ்ச்சி…
பெண்ணை வாழ்த்திட
வருடத்தில் ஒரு தினமா…
நித்தம் வாழ்த்தப்படவேண்டியவள்
பெண்…
ஒன்றல்ல இரண்டல்ல
பல உயிர்களை
தினம் தந்துகொண்டிருக்கின்றாள்
இவ்வுலகிற்கு…
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
அச்சாணியாய் வாழ்கிறாள்…
அவளை
போற்றாவிட்டாலும் பரவாயில்லை
அவமானம் செய்யாதீர்…
தவறான பாதையில்
தள்ளிவிடாதீர்…