கருணையின் இருப்பிடம்
கவிதையின் பிறப்பிடம்
அவள் விழிகள்…
முத்துக்களின் இருப்பிடம்
புன்னகையின் பிறப்பிடம்
அவள் இதழ்கள்…
பூக்களின் இருப்பிடம்
காந்தத்தின் பிறப்பிடம்
அவள் வதனம்…
அன்பின் இருப்பிடம்
காதலின் பிறப்பிடம்
அவள் இதயம்…
என்னுள்ளே புகுந்து
கலந்துவிட்டாள்
அவள்
என்னுயிருடன்…!!!