ஆசைகள் ஆயிரம்
மனதிலே தோன்றலாம்
பகுத்தறிவது
அறிவின் செயலாம்…
ஆசைகளோடு
நினைவில் கொள்வோம்
வருமானம்…
ஆசைகளில்
முதலிடம் கொடுப்போம்
தேவைகளுக்கு…
வருமானம் மிஞ்சிய செலவு
தேவை இல்லாத ஆடம்பரம்
அழைத்து வருவது
அழிவையே…
அளவோடு ஆசைகள் வளர்த்து
வளமோடு நலமாக வாழ்வோம்…