உன் கண்கள் சொல்லும் காதல்
காற்றோடு கலந்து வர
நான் சுவாசிக்கின்றேன்
உன்னை நேசிக்கின்றேன்…
என் உயிரோடு இணைந்துள்ள
உறவுகளோடு உறவாக
இணைந்துவிட்டாய் என்னுள்ளே
பல மாற்றங்கள் தருகின்றாய் எனக்குள்ளே…
புது வரவால்
என் உள்ளம் மட்டுமல்ல
இந்த உலகமே
அழகானது
இனிமையானது
புதுமையானது!!!