குழந்தைகள் எதிர்காலம்
சிறப்பாக மலர்ந்திட
உழைப்பு மட்டும்
போதாது…
கவனிப்பும்
அவசியமே…
செல்வம் சொத்து தேடி
பேயாய் அலைந்து
நிம்மதியை இழந்திடும்
பெற்றோர்…
அன்பு அரவணைப்பு தேடி
வேறிடம் நாடி
தீயவழியில் சென்றிடும்
குழந்தைகள்…
சீரழிந்து போயிடும்
குடும்பமே…!!!
நேரத்தை
பிரித்திடுவோம்
குழந்தைகளுடன்
களித்திருப்போம்…
உள்ளங்கள் மலர்ந்திட
உறவுகள் பலத்திட
இனிய இல்லறம்
கண்டிடுவோம்!!!