பேராசை கொண்டு மனிதன்
பஞ்ச பூதங்களை நஞ்சாக்க
கோபம் கொண்டு இயற்கை
சீற்றம் கொள்ள
அழிவை சந்தித்து மாய்ந்து போவது
அப்பாவி மக்களே…
கருகிப்போவது
கள்ளம் கபடமில்லா பிஞ்சுகளே…
தண்டிக்கப்படவேண்டியவர்கள்
தப்பு செய்பவர்களே…
ஆகையால்
இயற்கையே!
விழித்திரு
பார்த்திரு
வழங்கிடு மரணதண்டனை
தப்பானவர்க்கு மட்டுமே…