பூக்கள் மலர்வது
ஆதவன் வருவதால் அல்ல…
பூமி அழகாவது
வெண்ணிலவு வருவதால் அல்ல…
சுகந்தம் வீசுவது
மலர்கள் இதழ் விரிப்பதால் அல்ல…
செடிகள் அசைந்தாடுவது
தென்றல் வருவதால் அல்ல…
யாவும் நிகழ்கிறது
உன் வரவால் பெண்ணே…!!!
என்னுள்
விடியல் வருவதும்
ஆனந்தம் பொங்குவதும்
உன் வரவால் மட்டுமே!!!