ரவை – 1 கப்
தேங்காய் துருவல் – 1/4 கப்
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
செத்தல் மிளகாய் – 5
பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 தேக்கரண்டி
தேங்காயெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
ரவையை வறுத்து பொன்னிறமாகுமுன் இறக்கி வைக்கவும்.
உருளைக்கிழங்கு, வெங்காயம், செத்தல் மிளகாய் இவற்றை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
உப்புமா கிளறும் பாத்திரத்தில் தேங்காயெண்ணெய் விட்டு அதில் உருளைக்கிழங்கு, வெங்காயம், செத்தல் மிளகாய் இவற்றை ஒன்றாகப் போட்டு பொரிக்கவும். பொரிந்ததும் கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் சேர்த்து இரு முறை கிளறியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்கத் தொடங்கியதும் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கொதித்ததும் அடுப்பை நன்றாக குறைத்து, வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து அகப்பைக் காம்பால் கிளறி, எல்லாம் நன்றாக சேர்ந்ததும் இறக்கவும்.
தண்ணீர் சேர்க்குமுன் தக்காளிப்பழம் ஒன்றை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு இருமுறை கிளறினால் சுவை வேறாக இருக்கும்.