
விரைவில் வருவேன் என்றாய்
பசுமையை கொண்டு சென்றாய்…
நாட்கள்
மாதங்களாய் வருடங்களாய் பறக்க
மனமோ
அசையாது உன்னையே நினைக்க
காலங்கள் உருண்டோடினாலும்
காலநிலைகள் மாறி மாறி வந்து சென்றாலும்
என் விழிகள் காணவில்லை பசுமை…
எங்கும் வறட்சி
எதிலும் தளர்ச்சி…
என்னுடன்
சுற்றமும் சூழலும்
உயிர்ப்பைத் தேடி…