வறுத்த உழுத்தம் மா – 1/4 கப்
வறுத்த அரிசி மா – 1/4 கப்
தேங்காய் பால்/பசுப்பால் – 1 கப்
சீனி (sugar) – 1/4 கப்
நல்லெண்ணெய் – 1 table spoon
மிளகு தூள், சி.சீரக தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மா வகையையும் தூள் வகையையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
பால் பிரிந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அதனுள் சீனியை சேர்க்கவும்.
இருமுறை கலவையை கலக்கிய பின் அடுப்பை நன்றாக குறைத்து வைத்து கலந்து வைத்த மா/தூள் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து அகப்பை காம்பால் கிண்டியபடி நல்லெண்ணெயையும் சேர்க்கவும். சிறிதளவு நீர் பதத்திலேயே அடுப்பிலிருந்து இறக்கவும். இறக்கிய சிறிது நேரத்தில் களிப்பதம் வந்துவிடும்.
இது சத்தான காலை உணவு. மிகக் குறைந்த நேரத்தில் இலகுவாக செய்திடலாம்.