
சொற்களை கோர்த்து
வார்த்தையை உருவாக்கி
சொல்வதற்கு இதழ் விரித்தபோது
பறித்துச் சென்றது காற்று!!!
கவிதை ஒன்று புனைந்து
காகிதத்தில் பதித்து
கொடுப்பதற்கு கரம் உயர்ந்தபோது
பறித்துச் சென்றது காற்று!!!
என் காதலுக்கு எதிரி
காற்றா…
தயக்கமா…
இதோ
காற்றை நிறுத்தி
துணிவை அழைத்துச் செல்கின்றேன்
முயற்சியை தொடர்வதற்கு…!!!