மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை பதவியாசை
யாவுமே
பேராசையாகி
தலைவிரித்து ஆடுகையில்
கள்ளமும் கபடமும்
புகுந்திடுமே…
அங்கே சூதும் வாதும்
பிறந்திடுமே…
கூடவே
அச்சமும் உள்ளே நுழைந்திடுமே…
அச்சம் கொண்ட உள்ளத்திற்கு
சுதந்திரம் ஏது…
பாதிப்படையும் மக்களுக்கும்
சுதந்திரம் ஏது…
ஒவ்வொரு மனிதனுள்ளும்
நியாயமான ஆசைகள்
நேர்மையான வருமானங்கள்
கிடைப்பதில் திருப்தி
பிற உயிரில் கருணை
என்று பிறக்கின்றதோ
ஆண்கள் மனதிலே
பிற பெண்
தாயாய் சகோதரியாய் மகளாய்
என்று தெரிகின்றாளோ
பெண்கள் நடை உடையில்
விரசமின்றி
ஆண் மனதில் சலனத்தை தூண்டாது
என்று தெரிகின்றாளோ
அன்றே சுதந்திரம்
அதுவே சுதந்திரம்!!!