தீட்டிய எள்ளு – 1 கப்
வறுத்த உளுத்தம்மா – 1 கப்
சீனி (sugar) – 1 கப்
கொதிநீர் – சிறிதளவு
மிக்சியில் முதலில் சீனியை தூளாக்கி வைக்கவும். பின் தீட்டிய எள்ளை தூளாக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இவற்றுடன் வறுத்த உளுத்தம்மா சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் கொதிநீரை சிறிது சிறிதாக சேர்த்து கையால் பிசையவும். உருண்டைகளாக பிடிக்கும் பதம் வந்ததும். கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.
காய்ந்த பாத்திரத்தில் போட்டு ஈரம் படாமல் கவனமாக பாவித்தால் ஒரு கிழமை வரை பழுதாகாமல் இருக்கும்.
சுவையான சத்தான உணவு. காலை உணவாகவும் உண்ணலாம்.