பொழுது விடிந்தது
உலகம் ஒளிமயமானது
மலர்கள் மலர்ந்தன
பறவைகள் கானமிசைத்தன
கதிரவனின் வரவு தவறுவதில்லை…
ஆனால் இன்று
என் உள்ளம்…
விடியவில்லை
இருளடைந்திருந்தது
மலரவில்லை
ஓலமிட்டது
உன் வரவு தவறியதால்!!!
கதிரவனிடம் ஒழுக்கம்
கற்றுக்கொள்
கண்ணா!
என் உள்ளத்தை நித்தம்
மலரச்செய்
மன்னா!!!