தேவதையை
பார்த்தேன் ரசித்தேன்
அடையும் எண்ணமில்லை…
ஏனோ
நினைவை விட்டு
அகல மறுக்கிறாள்…
உள்ளத்தில்
ஒட்டி உறவாடுகிறாள்…
பாராது தவிர்த்தாலும்
விழிகளுக்குள்
விளையாடுகிறாள்…
உன்னை ரசித்ததற்கு
தண்டனை இதுவோ!!!
பெண்ணே!
என்
நினைவிலிருந்து
சென்றுவிடு…
என்
கடமையை
செய்யவிடு…