
தடுமாறச் செய்து
தடம் மாறச் செய்கின்றது
உன்
கடைக்கண் பார்வை…
அறிவை மயக்கி
காதல் கணைகள் தொடுக்கின்றது
உன்
கடைக்கண் பார்வை…
இதயத்தை தொட்டு
இதமாய் வருடுகின்றது
உன்
கடைக்கண் பார்வை…
காதல் கவிதைகள் பல
சொல்கின்றது
உன்
கடைக்கண் பார்வை…
மெதுமெதுவாக
என் உள்ளத்தினுள்ளே
உன்னை அழைத்து வருகின்றது
உன்
கடைக்கண் பார்வை!!!