தேன் சமைத்து சுகந்தம் இட்டு
இதழ்களால் மூடி
காத்திருக்கும் மலர்கள்…
நறுமணம் கவர்ந்து
வீசிச் செல்ல
பார்த்திருக்கும் தென்றல்…
விடியலிலே விருந்துண்ண
ஆவலுடன்
காத்திருக்கும் வண்டினம்…
இன்னிசை பொழிந்து
வரவேற்க
பார்த்திருக்கும் பறவைகள்…
இவையாவையுமே
கண்டு களித்து
புதியநாளை இனிதே தொடங்கிட
காத்திருக்கும் மனிதகுலம்…
ஒளிகொண்டு எழுந்துவரும்
கதிரவனுக்காக…