விழிகளோடு நின்றவளை
என்னுள்ளே
அழைத்து வந்தது யார்…
காற்றே!
என் அனுமதியின்றி
உள்ளே நுழைபவன்
நீயே…
என்னையறியாமல்
அழைத்து வந்தாயா…
என் இதயத்தில்
மறைத்து வைத்தாயா…
தெளிந்த நீரோடை போல
சென்றுகொண்டிருந்த
என் வாழ்க்கையை
கலக்கிவிட்டாள்…!!!
காதலை
கலந்துவிட்டாள்!!!