விருப்பத்தோடு கற்கும் கல்வி
நிலைத்து நிற்கும் உனக்குள்ளே
வெறுப்போடு கற்கும் கல்வி
அழிந்துவிடும் உனக்குள்ளிருந்து…
நேர்மையான உழைப்பைத் தரும்
உழைத்ததை பாதுகாக்க உதவும்
ஏமாறாமல் காப்பாற்றும்
பலம் மிக்க ஆயுதம் கல்வி…
ஆர்வத்தோடு கற்றுக்கொள்
நிழலாக தொடர்ந்து வரும்
ஆயுளுக்கும் பலன் தரும்
காலத்தால் அழியாதது கல்வி…