கதிரவன் மீது காதலால்
மலர்ந்து மணம் வீசும் பூக்கள்…
சந்திரன் மீது காதலால்
கண்சிமிட்டி மின்னும் தாரகைகள்…
பூமகள் மீது காதலால்
உருகிக் கொட்டும் மேகங்கள்…
கரை மீது காதலால்
பொங்கி முத்தமிடும் அலைகள்…
மலை மீது காதலால்
தழுவி மகிழும் அருவிகள்…
மலர் மீது காதலால்
அணைத்துச் செல்லும் தென்றல்…
மாசற்ற காதலால் கட்டுண்டு
பிரபஞ்சமே மகிழ்ந்திருக்க
மாந்தர் நாமும் காதலிப்போமே
மகிழ்ச்சியில் திளைத்திருப்போமே…
சுற்றத்தில் அன்பை பொழிந்து
உறவுகளில் பாசத்தை பொழிவோம்…
காதல் திருமணமா!!!
ஒருவரை காதலிப்போம்
அவரையே கரம் பிடிப்போம்…
நிச்சயித்த திருமணமா!!!
ஒருவரை கரம் பிடித்து
அவரையே காதலிப்போம்…
இளமையில் காதலிப்போம்
முதுமையிலும் காதலிப்போம்…
இறுதிவரை இணைந்திருந்து
மூச்சுள்ளவரை காதலிப்போம்…