உன் விழிகள்
வீழ்த்திவிட்டன
என் இதயத்தை
காதலில்…
முற்றும் துறந்து
காதலாகி
பற்றிக்கொண்டேன்
உன்னையே…
உறக்கம் துறந்தேன்
உணவைத் துறந்தேன்
கடமை துறந்தேன்
பொறுப்பையும் துறந்தேன்
அதனால்
நிம்மதி இழந்துவிட்டேன்…!!!
எனவே
பார்வையும் புன்னகையும்
என்மேல் பொழிந்து
சிநேகத்தை தந்துவிடு…
துறந்தவற்றை பற்றிடுவேன்
இழந்ததை பெற்றிடுவேன்
காதலுக்காய் வாழ்ந்திருப்பேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்…