வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்த
மாயக் கண்ணா
என் உள்ளமதை திருடிவிட்டாய்
காதல் கண்ணா…
கோபியரோடு விளையாடிய
மாயக் கண்ணா
என் மனதோடு விளையாடுகின்றாய்
காதல் கண்ணா…
குழலூதி எமை மயக்கும்
மாயக் கண்ணா
என் பெயர் கூறி எனை அழைக்காய்
காதல் கண்ணா…
அண்டத்தையே உன்னுள் வைத்த
மாயக் கண்ணா
எனை உன் உள்ளத்துள் வைத்துவிடு
காதல் கண்ணா…