தொலைவிலே மலர்ந்திருந்து
என்னுள்ளே கலவரம் செய்கின்றாய்…
மின்சாரமாய் பாய்கின்றாய்
காந்தமாய் இழுக்கின்றாய்…
பூமழை பொழிகின்றாய்
தென்றலாய் தழுவுகின்றாய்…
என் இதயத்திற்கு விருந்தாகி
காதல் பசியை தீர்த்துவிட்டாய்…!!!
என் உயிருக்கு மருந்தாகி
ஆயுளை கூட்டிவிட்டாய்!!!