உன்னாலே
ஆனந்தம் என்னுள் பரவியது
தோற்றத்தில் மாற்றங்கள் வந்தன
உணர்வுகளில் மென்மை குடிகொண்டது…
அத்தனையும் தந்து
மறைந்துவிட்டாயே இன்று…
காரணம் தெரியாது
தவிக்கின்றது மனம்…
மௌன மொழி பரிமாற்றம்
தந்தது ஏமாற்றம்…
நாளை வந்துவிடு…
வார்த்தைகளால் மாலை கட்டி
காத்திருப்பேன்
காதலை பதிவு செய்ய!!!