கண்கள் உன்னை விட்டுப் பிரிந்தாலும்
உள்ளத்தில் நிறைத்துவிட்ட உன்னை
பார்த்துக்கொண்டே இருக்கின்றது
மனக்கண்…
தொலைதூரம் நீ சென்றாலும்
நெருக்கமாக இருக்கின்றாய்
என்னுள்ளே…
சந்திப்பும் பிரிவும்
உடல்களுக்கே…
இரண்டறக் கலந்து
இணைந்துவிட்ட
உள்ளங்கள்
சேர்ந்தே இருந்து
படிக்கின்றன – காதல்
பாடங்கள்!!!