வானத்து தாரகைகள்
ஒன்றாக கூடி
களிக்குமிடம்
உன் வதனமோ…
மலர்கள் எல்லாம்
தேனை
சேமித்து வைக்குமிடம்
உன் இதழ்களோ…
மன்மத அம்புகள் தேவையில்லை
எனை வீழ்த்த
பார்வை ஒன்றே போதுமென
சொல்வது
உன் விழிகளோ…
என்னை
காந்தமென இழுத்து
உன்னையே சுற்ற வைப்பது
காதலோ…!!!
அது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ஒன்றாக
பூத்ததோ!!!