இயற்கையிலே குடியிருந்து
நலம் காக்கும் ஐயா – எங்கள்
நலம் காக்கும் ஐயா
இயற்கைதனை கெடுப்போரை
அழித்துவிடு ஐயா – முழுதாய்
அழித்துவிடு ஐயா
சுவாசத்திற்கு தேவையான
காற்றைத் தரும் ஐயா – சுத்த
காற்றைத் தரும் ஐயா
நச்சுப்புகை கலப்போரை
அழித்துவிடு ஐயா – முற்றாய்
அழித்துவிடு ஐயா
பசியாற உணவுக்காக
மழையைத்தரும் ஐயா – பருவ
மழையைத்தரும் ஐயா
காடுகளை வெட்டுவோரை
அழித்துவிடு ஐயா – அறவே
அழித்துவிடு ஐயா
வையகத்தில் பரந்திருக்கும்
எங்கள் குல தெய்வம் – நீயே
எங்கள் குல தெய்வம்
கருணைக் கண்கள் திறந்து எம்மை
காத்திடுவீர் ஐயா – நித்தம்
காத்திடுவீர் ஐயா