தாய்க்கு தலைமகனாய் பிறந்தான்
தாய்மண்ணுக்காய் விரைந்து சென்றான்
நயவஞ்சகரின் சூழ்ச்சிகளால் காணாமல் போனான்
தாயின் அசைக்கமுடியாத நம்பிக்கையில் இன்றும் வாழ்கின்றான்…
இது
ஒரு கதை…
மகன் மகள்
தாய் தந்தை
சகோதரன் சகோதரி
உறவுகளின்
பல கதைகள்
இன்றும் இங்கு
தொடர்கதைகளாக…
கண்ணீருடன்
காத்திருக்கின்றன
உறவுகள்
விடியலுக்காக…