பாவக்காய் சம்பல்
பாவக்காய் பெரியது – 1
பெரிய வெங்காயம் பெரியது – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு, தேசிக்காய் புளி – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்
பாவக்காய், பெரிய வெங்காயம், பச்சைமிளகாயை சுத்தம் செய்து, மெல்லிய வட்டங்களாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய பாவக்காயை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாயுடன் உப்பு, தேசிப்புளி சேர்த்து கலக்கவும்.
*******
இதே போல பாவக்காய்க்கு பதிலாக,
வெண்டிக்காயை வட்டமாக நறுக்கி பொரித்து சேர்த்தால் – வெண்டிக்காய் சம்பல்.
கத்தரிக்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி பொரித்து சேர்த்தால் கத்தரிக்காய் சம்பல்.
*******
இன்னொரு வகை கத்தரிக்காய் சம்பல்
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி, அதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, தேசிப்புளி சேர்த்து நன்றாக பிசையவும்.
*******