அவித்த கோதுமை மா (மைதா மா) – 1 கப்
வறுத்த அரிசி மா – 1/4 கப்
வறுத்த உழுத்தம் மா – 1/8 கப்
மிளகு தூள் – 2 தேக்கரண்டி (Tea spoon)
நற்சீரகத் தூள் (சின்ன சீரகம்) – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப் பால் – 1/4 கப்
இவை யாவையும் ஒன்றாக சேர்த்து முறுக்கு பிழியும் பதத்திற்கு குழைக்கவும். தேவையாயின் நீர் சேர்க்கவும்.
கலவையை முறுக்கு உரலில் இட்டு வட்டம் வட்டமாக பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.