நெத்தலி தீயல்
நெத்தலி மீன் – 250 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
பூடு – 3 பல்
தேங்காய்ப் பால் – 1/4 கப்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு, புளி கரைசல் – தேவையான அளவு
மிகவும் சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயம், பூடு, சுத்தம் செய்த நெத்தலி மீன் மற்றும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக பாத்திரத்தில் இட்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து மீன் நொருங்காமல் மெதுவாக கிளறி வறண்டதும் இறக்கவும்.
இது மதிய உணவுக்கு சாதத்துடன் உண்ணலாம்.