குரக்கன் புட்டு
குரக்கன் மா – 2 கப்
அவித்த கோதுமை மா – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
வெல்லப் பொடி – 1/2 கப்
சீனி (sugar) – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
இரு மா வகைகளையும் ஒன்றாக சேர்த்து சிறிதளவு உப்பும் சேர்த்து அதில் நன்றாக கொதித்த நீர் சிறிது சிறிதாக விட்டு அகப்பை காம்பால் புட்டு உருத்தும் பதம் வரும் வரை கிளறி உருத்தவும்.
உருத்திய புட்டுடன் 1/2 கப் தேங்காய்த் துருவல் சேர்த்து இட்டலிச் சட்டியிலோ அல்லது புட்டுப் பானையிலோ வைத்து வேக வைக்கவும்.
புட்டு அவிந்ததும் ஒரு பாத்திரத்தில் இறக்கி, சூட்டுடனே மிகுதி தேங்காய்த் துருவல், வெல்லம், சீனி சேர்த்து அகப்பையால்/கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
சுவையான குரக்கன் புட்டு தயார். இது எங்கள் காலை உணவு.
*****
குரக்கன் ரொட்டி
குரக்கன் மா – 1 கப்
அவித்த கோதுமை மா – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
வெல்லப் பொடி – 1/4 கப்
சீனி (sugar) – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
இவை யாவையும் ஒன்றாக கலந்து நீர் சேர்த்து ரொட்டி செய்யும் பதத்திற்கு குழைத்து, தேவையான அளவில் ரொட்டி செய்து தோசை சுடும் பாத்திரத்தில் வேக வைத்து இறக்கவும்.
ரொட்டி செய்யும் போது வெடிப்புகள் வரலாம். அவித்த கோதுமை மா சிறிது சேர்த்து, சிறிய அளவிலான ரொட்டிகள் செய்து அதை தவிர்க்கலாம்.
*****