கண்ணா! மணிவண்ணா!
மாயமாய் மறைந்ததேனோ…
கடைந்து வைத்த வெண்ணெய்யோடு
களவாடிச் சென்ற
எங்கள் மகிழ்ச்சிதனை
திருப்பித் தந்திட
ஓடோடி வாடா
மாயக்கண்ணா…
உன் குறும்புகள் அதிகரித்து
கட்டி வைத்தாளோ யசோதை…
கட்டவிழ்க்க தெரியாதவனா நீ!
எங்கள்
விழிகளையும் செவிகளையும்
குளிர்விக்க மகிழ்விக்க
விரைந்தோடி வாடா
செல்லக் கண்ணா!
குறும்புக் கண்ணா!