முதல் நாலு நாட்களுக்கு நிறைய சின்ன சீரகம், சிறிதளவு மல்லி, மஞ்சள் சேர்த்து அரைத்து (சரக்கு), பிஞ்சு முருங்கைக்காய் / பிஞ்சு கத்தரிக்காய், புளி, மிக சிறிதளவு உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து களி பருவத்தில் இறக்கி, கைக்குத்தரிசி கரையல் சாதத்துடன் இரு வேளை கொடுப்போம்.
ஐந்தாம் நாளிலிருந்து மரக்கறிக்குப் பதில் சிறிய மீன்/ கருவாடு இவற்றுடன் சிறிய துண்டு தேங்காய் சொட்டு, சிறிய பல் பூண்டு சேர்த்து அரைப்போம்.
பின் மெது மெதுவாக ஒன்று இரண்டாக மிளகும், சிறிது சிறிதாக மல்லியும் கூடுதலாக அரைப்பதற்கு சேர்ப்போம்.
முட்டை / கத்தரிக்காய், சின்னச் சீரக தூள் சேர்த்து நல்லெண்ணெயில் பொரித்து கொடுப்போம்.
மொத்தத்தில் சின்னச் சீரகம் எவ்வளவு கூடுதலாக சாப்பாட்டுடன் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்போம்.