புழுங்கல் அரிசிப் பொரி
வறுத்து கோது நீக்கி உடைத்த உழுந்து
வறுத்து கோது நீக்கி உடைத்த பயறு
கோது நீக்கி வறுத்த எள்ளு
- இவற்றை சம அளவு எடுத்து அரைத்து மாவாக்கி காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவையான நேரம் தேவையான அளவு எடுத்து தேங்காய்ப்பூ, சர்க்கரை (sugar) சேர்த்து நீர் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு பிடித்த சத்தான மா உருண்டை இது. காலை நேர உணவாகவோ மாலை நேர சிற்றுண்டியாகவோ உண்ணலாம்.
- இவற்றை சம அளவு எடுத்து கலந்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து இடை நேரங்களில் சாப்பிடலாம். விரும்பினால் இக் கலவையுடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.