தக்காளி சலாட்
தக்காளிப்பழம்
கறி மிளகாய்
பெரிய வெங்காயம்
மிளகு தூள்
உப்பு
தக்காளிப்பழம், கறி மிளகாய், வெங்காயம் இவை மூன்றையும் மெல்லிய வட்டங்களாக நறுக்கி உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
கரட் சலாட்
கரட் துருவல், சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயமும் பச்சை மிளகாயும், சிறிதளவு தேங்காய் தூருவல், உப்பு, மிளகு தூள், தேசிக்காய் புளி. இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி பரிமாறவும்.
வெங்காய சலாட்
மெல்லிய வட்டங்களாக நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு, மிளகு தூள், தேசிக்காய் புளி அல்லது தயிர். இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி பரிமாறவும்.
கெக்கரிக்காய் (cucumber) சலாட்
மெல்லிய வட்டங்களாக நறுக்கிய கெக்கரிக்காயும் பெரிய வெங்காயமும், உப்பு, மிளகு தூள். இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி பரிமாறவும்.