பொய்யிலும் புரட்டிலும்
திருட்டிலும் ஏமாற்றுவதிலும்
கட்டியெழுப்பும் வாழ்க்கை
தருவது
நிலையில்லா செல்வத்துடன்
துன்பமும் துயரமும்
இழப்பும் சஞ்சலமுமே…
அழிவது
தூக்கமும் நிம்மதியுமே…
நேர்மையும் உண்மையும்
நியாயமும் தர்மமும்
தன்னகத்தே கொண்ட வாழ்க்கை
நிலையான அளவான செல்வத்துடன்
மகிழ்ச்சியில் திளைப்பது நிச்சயமே…
வெற்றிப் பாதையில் செல்வது சத்தியமே…
இலக்கை அடைவது சாத்தியமே…