சதுரமாக வெட்டிய பாண் (bread) துண்டுகள் – 6
கரட் சிறியது – 1
உருளைக்கிழங்கு சிறியது – 1
உப்பு, மிளகு தூள்
பட்டர்/மாஜரீன்
கரட், உருளைக்கிழங்கை வேக வைத்து, vegetable scraper ஆல் வேறு வேறாக மா மாதிரி துருவி உப்பு மிளகுதூள் சேர்த்து வைக்கவும்.
ஒரு துண்டு பாணில் பட்டர்/மாஜரீன் பூசி அதன்மேல் கரட் துருவலை தூவி, மறு துண்டு பாணில் பட்டர்/மாஜரீன் பூசி மூடவும். இதன் மேல் பாகத்தில் பட்டர்/மாஜரீன் பூசி அதன்மேல் உ.கிழங்கு துருவலை தூவி, இன்னுமொரு துண்டு பாணில் பட்டர்/மாஜரீன் பூசி மூடவும்.
விரும்பினால் முட்டையையும் அவித்து இதுபோல் துருவல் செய்து இன்னுமொரு லேயர் வைக்கலாம்.
இலகுவாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சத்தான காலை உணவு.