செந்தணலாய் எழுந்து வரும்
செஞ்சூரியன் கோபம் தனை
தணியச் செய்து அனுப்பி வைக்கும்
பூமித் தாய்…
நித்தம் அவனை
சினம் கொள்ளச் செய்பவர் யார்…!!!
அவன் உக்கிரத்தால் வாடி வதங்கி
களையிழக்கின்றாள்…
சமாதானம் செய்து அனுப்பும் வரை
சோர்ந்து போகின்றாள்…
தயைகூர்ந்து வேண்டுகிறேன்
சினமூட்டாதீர் கதிரவனை!!!