எனக்காகவே படைத்தானோ
பிரம்மன் உன்னை…
உன்னுள்ளே ஒளித்து வைத்தானோ
எந்தன் காதலை…
அதை
அன்பென்னும் கூண்டில்
அடைத்து வைத்தாயோ…
பண்பை கயிறாக்கி
கட்டி வைத்தாயோ…
நாணத்தை போர்வையாக்கி
மூடி வைத்தாயோ…
அச்சத்தை குழைத்தெடுத்து
அரணமைத்தாயோ…
பெண்ணே!
புறப்பட்டுவிட்டது
எந்தன் இதயம்…
யாவையும் தகர்த்தெறிந்து
கவர்ந்து வர
எந்தன் காதலை…