கேட்டால் தரமாட்டாய்
கேட்காமலே தருகின்றாய்
முத்தங்கள் பல
கோபம் தணிப்பதற்கு…
சொல்லித்தந்தால் அழைக்கமாட்டாய்
சொல்லாமலே அழைக்கின்றாய்
ம்மம்மாவென
உன் தேவைக்கு…
செல்லமே!
உன் குறும்புகளும் யுக்திகளும்
தருவது இன்பமே…!!!
உன் கள்ளமில்லா சிரிப்பும்
புரியாத மழலையும்
காட்டுவது சொர்க்கமே!!!