சோயாமீட் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 150 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பூடு, இஞ்சி
பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 மேசைக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், உப்பு, புளிக் கரைசல், கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, விரும்பிய அளவில் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சோயாமீட்டை 5 நிமிடங்கள் கொதிநீரில் ஊற வைத்து வடித்தெடுத்து பின் குளிர் நீர் ஊற்றி, நீரில்லாமல் பிழிந்தெடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். (ஊறிய சோயாமீட் பெரிதாக இருந்தால் இரண்டாக வெட்டவும்).
தாச்சியை அடுப்பில் வைத்து முதலில் வெங்காயத்தை போட்டு அரைவாசி வதங்கியதும் தட்டி நசித்து வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து இருமுறை கிளறி, அடுத்து வெந்தயத்தை சேர்த்து ஒரு முறை கிளறி பின்பு பெருஞ்சீரகத்தை சேர்த்து அதன்பின் கறிவேப்பிலை சேர்த்து அதன் பிறகு புளிக் கரைசல் (கரைசல் கெட்டியாக இருந்தால் சிறிதளவு நீர் சேர்க்கவும்), மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து தூள் மணம் போனதும் அடுப்பை நன்றாக குறைத்து வைத்து இக் கலவையுடன் சோயாமீட் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிரட்டி ஓரளவு வறண்டதும் இறக்கவும்.