1. சோளம் பொரி
சோளம் (காய்ந்த உதிரி சோளம்)
உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், எலுமிச்சம் புளி – தேவையான அளவு
காய்ந்த வெறும் இரும்புச் சட்டியில் ஒரு கை பிடி சோளத்தை போட்டு மிதமான தீயில் கருக விடாமல் பொரித்து எடுக்கவும்.
இப்படியாக தேவையான அளவு சோளத்தை பொரித்தெடுக்கவும்.
உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், எலுமிச்சம் சாறு இவற்றை பொரியுடன் சேர்த்து கலந்துவிடவும்.
சுவையான சோளம் பொரி தயார்…..

.
2. அவித்த சோளம்
தோல் நீக்கிய பச்சை முழு சோளத்தை (தேவையான எண்ணிக்கை) ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்குமளவு நீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி கொதிக்க விடவும். நன்றாக அவிந்ததும் நீரை வடித்து ஆற விடவும்.
அவித்த சோளம் தயார்….

.