தனிமையை நாடும்
நெஞ்சம்
கவலைகள்
கயிறாய் இறுக்குகையில்…
அதை அறுத்தெறியும்
நினைவில் தோன்றும்
இனிமையான தருணங்கள்…
தனிமையில் இருக்கையிலே…
தென்றல் தவழ்ந்து வரும்
சுகந்தம் சுமந்து வரும்
இனிய நினைவுகளை
இனிதே அழைத்து வரும்
நெஞ்சை நிறைத்திருந்து
புத்துயிர் தந்து செல்லும்…